போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பள்ளி வாகனங்கள் மீது 1,161 வழக்குகள் பதிவு


போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பள்ளி வாகனங்கள் மீது 1,161 வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 2 April 2022 10:30 AM IST (Updated: 2 April 2022 10:30 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய பள்ளி வாகனங்கள் மீது 1,161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

சென்னை, 

சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி பள்ளி வாகனங்கள் செயல்பட வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில் பள்ளி வாகனங்களை கண்காணிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டு இருந்தார். அதன்படி கடந்த 31-ந் தேதி அன்று பள்ளி வாகனங்களை கண்காணித்து, விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்கள் மீது வழக்கு போடப்பட்டது. அந்த வகையில் 1,161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பள்ளி வாகன ஓட்டுனர்களும், குழந்தைகளை ஏற்றிச்செல்லும் போது உரிய பாதுகாப்புடனும் விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும் போக்குவரத்து போலீசார் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.

Next Story