மின்வேலியில் சிக்கி விவசாயி பலி
திருவள்ளூர் மாவட்டத்தில் மின்வேலியில் சிக்கி விவசாயி பலியானார்.
திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட அருங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 60). விவசாயி. இவர் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் நேற்று காலை வரை வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடிவந்தனர்.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த தேசப்ப ரெட்டி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நெற்பயிருக்கு அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி மணி பலியாகி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் கனகம்மாசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மணிக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கனகம்மாசத்திரம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story