போடி நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


போடி நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 2 April 2022 3:25 PM IST (Updated: 2 April 2022 3:25 PM IST)
t-max-icont-min-icon

போடி நகராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

போடி:
போடி நகராட்சி 30-வது வார்டு பகுதியை சேர்ந்த கருப்பசாமி கோவில் சாலையில் சாக்கடையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தன. இந்த ஆக்கிரமிப்பு குறித்து பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர், ஆணையாளர் சகிலா, நகராட்சி என்ஜினீயர் செல்வராணி மற்றும் வார்டு கவுன்சிலர் பெருமாள் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை கண்டறிந்தனர். 
இதைத்தொடர்ந்து சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையில் நகராட்சி பொது சுகாதார பிரிவு பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். பின்னர் சாக்கடை கால்வாயில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கழிவுநீர் விரைவில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Next Story