ஊட்டி கூடலூரில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்


ஊட்டி கூடலூரில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம்
x
தினத்தந்தி 2 April 2022 4:40 PM IST (Updated: 2 April 2022 4:40 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டி, கூடலூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம் நடந்தது.

கூடலூர்

ஊட்டி, கூடலூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன போராட்டம் நடந்தது.


பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் பெட்ரோல், டீசல், மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.250 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வணிகப் பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.2 ஆயிரத்து 253 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் 22-ம் தேதி ரூ.50 உயர்த்தப்பட்டது.
தொடர் விலையேற்றத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. மேலும் ஏழை நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்துவதை கண்டித்து பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நூதன போராட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் சி.கே. மணி தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் வாசு, சுரேஷ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் யோகசசி, அரவிந்தன், முத்து, ஜோஸ் தங்கராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடல் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கணேஷ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பெட்ரோல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைக்க கோரி மொபட் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீலகிரியில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1000 கடந்து உள்ளது. இல்லத்தரசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். விலை உயர்வை திரும்ப பெறவேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும் மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story