கத்தியால் குத்தி பெயிண்டர் கொலை


கத்தியால் குத்தி பெயிண்டர் கொலை
x
தினத்தந்தி 2 April 2022 6:51 PM IST (Updated: 2 April 2022 6:51 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டியில், கத்தியால் குத்தி பெயிண்டர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர்.

திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டியில், கத்தியால் குத்தி பெயிண்டர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது அண்ணன் மகனை போலீசார் கைது செய்தனர். 
பெயிண்டர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி உப்புகுளத்தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(வயது48). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவரது குடும்பத்துக்கும், இவருடைய அண்ணன் தங்கராஜ் குடும்பத்துக்கும் இடையே திருமண பத்திரிகையில் பெயர் போடுவது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டது. இந்த பிரச்சினை கடந்த ஒரு ஆண்டாக நீடித்து வந்தது. 
இந்த நிலையில் நேற்று காலை திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலையில் பெயிண்டிங் வேலைக்கு செல்ல முருகேசன் சக தொழிலாளர்களுடன் நின்று கொண்டிருந்தார். 
கத்திக்குத்து
அப்போது அங்கு வந்த தங்கராஜ் மகன் சதீஷ்(32), தனது சித்தப்பா முருகேசனிடம் தகராறில் ஈடுபட்டார். 
அப்போது வாக்குவாதம் முற்றியதில் சதீஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகேசனை நெஞ்சு பகுதியில் குத்தினார்.
பரிதாப சாவு
இதில் படுகாயம் அடைந்த முருகேசன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சாய்ந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முருகேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட முருகேசனுக்கு சுதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர் 
கைது
இந்தநிலையில் சதீஷ், சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் இருந்த  போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு ஆகியோர் சதீசை கைது செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.
முருகேசன் உடல் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெயிண்டர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருத்துறைப்பூண்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 



Next Story