பந்தலூர் அருகே சோதனைச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


பந்தலூர் அருகே சோதனைச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 2 April 2022 6:52 PM IST (Updated: 2 April 2022 6:52 PM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே மாவோயிஸ்டுகள் நடமாட்டம் காரணமாக சோதனைச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார். மேலும் தீவிரமாக கண்காணிக்கவும் அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

பந்தலூர்

பந்தலூர் அருகே மாவோயிஸ்டுகள் நடமாட்டம் காரணமாக சோதனைச்சாவடிகளில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார். மேலும் தீவிரமாக கண்காணிக்கவும் அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். 

மாவோயிஸ்டுகள் நடமாட்டம்

தமிழக-கேரள எல்லையில் வயநாடு, சுல்தான்பத்தேரி, முத்தங்கா, வைத்திரி உள்பட பல்வேறு பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ளது. இவர்கள் கிராமப்பகுதிக்குள் புகுந்த பொதுமக்களை மிரட்டி அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கிச்சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அரசு எதிராக போராட்டங்கள் நடத்துவதோடு, துண்டு பிரசுரங்களை மாவோயிஸ்டுகள் ஒட்டி வருகிறார்கள். 
இந்தநிலையில் தமிழக-கேரள எல்லையில் பந்தலூர் தாலுகா உள்ளதால் மாவோயிஸ்டுகள் தமிழகத்திற்குள் நுழையாமல் இருக்க பாட்டவயல், நம்பியார்குன்னு, பூலக்குன்று, கக்குண்டி தாளூர், கோட்டூர், சோலாடி, நாடுகாணி உள்பட பல பகுதிகளில் போலீஸ் சோதனைசாவடிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

இந்தநிலையில் பாட்டவயல் அருகே சொரியன் காப்பு பகுதியில் ஒரு வீட்டிற்குள் பெண் உள்பட 4 பேர் கொண்ட மர்ம ஆசாமிகள் துப்பாக்கிகளுடன் சென்று உணவு சாப்பிட்டு தங்கிவிட்டு உணவு பொருட்களையும் வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்த அதிவிரைவு படை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினார்கள் ஆனால் யாரும் சிக்கவில்லை. அந்த வீட்டில் தங்கியவர்கள் மாவோயிஸ்டுகளா அல்லது வேறு யாராவது வந்து சென்றார்களா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் பந்தலூர் அருகே உள்ள ேசாதனைச்சாவடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், மர்மநபர்கள் நடமாட்டம் உள்ளதா என்று கண்காணிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது அதிவிரைவு படை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன்நிவாஸ், தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர். 

Next Story