மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்
வந்தவாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி
திருண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தபால் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து வந்தவாசி வட்டார செயலர் அ.அப்துல்காதர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர்.
இதில் இடைக்குழு உறுப்பினர் செ.மோகன், கிளை செயலர்கள் என்.ராதாகிருஷ்ணன், ரா.சேட்டு, பிற சங்க நிர்வாகிகள் பெ.அரிதாசு, ஆர்.ராமகிருஷ்ணன், கி.பால்ராஜ், கா.யாசர்அராபத் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story