3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 2 April 2022 7:26 PM IST (Updated: 2 April 2022 7:26 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் கைதான 3 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே பெரியகோட்டையை சேர்ந்தவர் கோபால்சாமி (வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த மாதம் 6-ந்தேதி ம.மு.கோவிலூர் மொண்டியபட்டி பிரிவு அருகே காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுதொடர்பாக தாலுகா போலீசார் நடத்திய விசாரணையில் முள்ளிப்பாடியை சேர்ந்த யோகேஷ் (27), முத்துக்குமார் (20), ராமர் (21), கோபிநாத் (20), விஜய் (19), வடமதுரையை சேர்ந்த லட்சுமணன் (19), சீலப்பாடியை சேர்ந்த ராஜா (22) ஆகிய 7 பேர் சேர்ந்து கோபால்சாமியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்து, திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட யோகேஷ், லட்சுமணன், முத்துக்குமார் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் 3 வாலிபர்களையும், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார். இதையடுத்து யோகேஷ், லட்சுமணன், முத்துக்குமார் ஆகிய 3 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story