வேடசந்தூர் அருகே ஸ்படிகலிங்கேஸ்வரர் கோவிலில் சந்திர தரிசன வழிபாடு


வேடசந்தூர் அருகே ஸ்படிகலிங்கேஸ்வரர் கோவிலில் சந்திர தரிசன வழிபாடு
x
தினத்தந்தி 2 April 2022 8:23 PM IST (Updated: 2 April 2022 8:23 PM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே ஸ்படிகலிங்கேஸ்வரர் கோவிலில் சந்திர தரிசன வழிபாடு நடைபெற்றது.

வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே கே.புதூர் சிவகிரியில் பஞ்சலிங்கேஸ்வரர், ஸ்படிகலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில், மூன்றாம் வளர்பிறை சந்திர தரிசன சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் இருந்து கலசங்களில் பக்தர்கள் புனிதநீர் எடுத்து வந்தனர். பின்னர் புனிதநீருடன் பஞ்சலிங்கேஸ்வரர் மலையை சுற்றி வந்தனர்.
அதன்பிறகு கோவிலில் உள்ள பஞ்சலிங்கேஸ்வரர், ஸ்படிகலிங்கேஸ்வரர் ஆகிய மூலவர்களுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதனையடுத்து மாலையில் வானத்தில் மூன்றாம் பிறை வளர்பிறை சந்திர தரிசனம் காணுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், ரெட்டியார்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story