விடா முயற்சி, தன்னம்பிக்கை கொண்டு படித்தால் எளிதில் வெற்றி பெறலாம்
விடா முயற்சி, தன்னம்பிக்கை கொண்டு படித்தால் எளிதில் வெற்றி பெறலாம் என மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
திருவாரூர்:
விடா முயற்சி, தன்னம்பிக்கை கொண்டு படித்தால் எளிதில் வெற்றி பெறலாம் என மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடலில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.
கலந்துரையாடல்
கொரோனா காலத்திற்கு பிந்தைய கற்றல் சூழலை நன்கு உணர்ந்த திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், உளவியல் ரீதியாக பள்ளி மாணவர்களை அணுக திட்டமிட்டார். அதன்பேரில் திருவாரூர் கலெக்டர் முகாம் அலுவலகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுடன் கற்றல் முறைகள் குறித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்களின் இல்ல சூழல், அரசு பள்ளிகளின் கற்றல்-கற்பித்தல் செயல்பாடுகள், ஆசிரியர்களின் செயல்பாடுகள், அரசின் நலத்திட்டங்கள் ஆகியவற்றை எளிமையான முறையில் கலந்துரையாடினார்.
மேலும் சத்தான உணவு, சுகாதாரமான குடிநீர் மற்றும் கழிவறை வசதி மற்றும் ‘நம் பள்ளி நம் பெருமை', ‘நான் முதல்வன்' ஆகிய தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும் அவர்களது உள்வெளிப்பாட்டினை கலெக்டர் தெளிவாக அறிந்து கொண்டார். குறிப்பாக மாணவர்கள் தங்கள் மீதும் தாங்கள் கொண்டிருக்கும் குறிக்கோள் குறித்தும் கேட்டறிந்தார்.
விடாமுயற்சி
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
மாணவர்கள் அச்சம், மன அழுத்தம் இன்றி படிக்க வேண்டும். விடா முயற்சி, தன்னம்பிக்கை கொண்டு படித்தால் எளிதில் வெற்றி பெறலாம். கல்வியுடன் நல்ல பண்புகளை வளர்த்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோர்களை மதித்து நடந்து கொள்ள வேண்டும்.
பள்ளி மேல்நிலை இறுதி படிப்பு உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியது என்பதால் கவனமாக படிக்க வேண்டும். குறிக்கோளை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். இலக்கை அடைய விடாமுயற்சி நிச்சயம் வெற்றியை தரும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இதில் முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
---
Related Tags :
Next Story