நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு


நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 2 April 2022 8:45 PM IST (Updated: 2 April 2022 8:45 PM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நீடாமங்கலம்:
நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
வீர ஆஞ்சநேயர் கோவில் 
நீடாமங்கலம் வீரஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி வீர ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி சந்தானராமர், விஸ்வக்சேனர் ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திரளான பக்தர்கள் 
இதேபோல் திருவோணமங்கலம் ஞானபுரியில் உள்ள சங்கடஹர மங்களமாருதி ஆஞ்சநேயர், ஆலங்குடி அபயவரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் பிரசித்தி பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சனிக்கிழமை வழிபாடு நடைபெற்றது. இதில்  வீர ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் மற்றும் வடமாலை சாற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
------


Next Story