நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மன்னார்குடியில் நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மன்னார்குடி:
மன்னார்குடி பாலகிருஷ்ணன நகரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்கம் மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி. சுமைதூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில நிர்வாக குழு உறுப்பினர் சிவா தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார், மாநில செயலாளர் கலியபெருமாள், மாநில இணை பொதுச்செயலாளர் குணசேகரன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சந்திரசேகரஆசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பவேண்டும். நெல் மூட்டைகளில் ஏற்படும் எடை இழப்பை தொழிலாளர்கள் மீது சுமத்த கூடாது. சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பள தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story