மோட்டார்சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு
நன்னிலத்தில் மோட்டார்சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி ேதடிவருகின்றனர்.
நன்னிலம்:
நன்னிலத்தில் மோட்டார்சைக்கிளில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி ேதடிவருகின்றனர்.
ரூ.2 லட்சம் திருட்டு
நாகப்பட்டினம் மாவட்டம் கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் பேரளம் அருகே உள்ள உபய வேதாந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று நன்னிலத்தில் உள்ள ஒரு வங்கியில் ரூ. 2 லட்சத்தை எடுத்தார். பின்னர் அந்த பணத்தை தனது மோட்டார்சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்துகொண்டு பூந்தோட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது தூத்துக்குடி என்ற இடத்தில் வந்த போது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 நபர்கள் ரெங்கசாமியிடம் உங்கள் பணம் கீழே விழுந்து விட்டது என கூறினர். இதனை நம்பிய ரங்கசாமி மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு அந்த பணத்தை எடுத்துள்ளார். அப்போது மர்மநபர்கள் ரங்கசாமி மோட்டார்சைக்கிள் பெட்டியில் வைத்திருந்த ரூ.2 லட்சத்தை திருடி கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து நன்னிலம் போலீசில் ரங்கசாமி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
வலைவீச்சு
இதேபோல் நன்னிலம் அருகே உள்ள காக்காகோட்டூரில் ஒரு வேனில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர். அப்போது வேனை அருகே நிறுத்திவிட்டு ஒருவர் டீ குடிக்க சென்றார். அப்போது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் வேனின் பின்புறம் ரூ.100-ஐ போட்டுவிட்டு, உங்கள் பணம் கீழே கிடக்கிறது என கூறினர். இதனை நம்பிய டிரைவர் பணத்தை எடுக்க சென்றுள்ளார். அப்போது வேனில் டிரைவர் சீட்டில் இருந்த ரூ.2,500-ஐ திருடி கொண்டு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து நன்னிலம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
----
Related Tags :
Next Story