கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 2 April 2022 9:03 PM IST (Updated: 2 April 2022 9:03 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகில் உற்சாக பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை ரசித்தனர்.

கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் படகில் உற்சாக பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை ரசித்தனர்.
சுற்றுலா பயணிகள்
புகழ்பெற்ற சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அதுவே விடுமுறைநாளில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.
இந்தநிலையில்  சுற்றுலா பயணிகள் அதிகாலை முதலே குவிந்தனர். அங்கு சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர்.
படகில் உற்சாக பயணம்
பின்னர் சரியாக காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை காண படகு போக்குவரத்து இயக்கப்பட்டது. நீண்ட வரிசையில் படகுத்துறையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் படகில் பயணம் செய்தனர். தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை பகுதிக்கு சென்று ரசித்தனர்.
மாலையில் கடற்கரையில் திரண்ட சுற்றுலா பயணிகள் கடலின் காற்றை இதமாக அனுபவித்தனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், வீட்டில் இருந்த போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியேறி சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு வந்தோம். இங்கு கடல் காற்று மிகவும் இதமாக இருந்தது. குடும்பத்தோடு உற்சாகமாக பொழுதை கழித்தோம் என தெரிவித்தனர்.
கன்னியாகுமரியில் கடற்கரை மட்டுமின்றி காந்தி மண்டபம், காமராஜர் மணிமண்டபம், கடற்கரை பகுதியில் உள்ள தமிழன்னை பூங்கா, பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா மற்றும் சுரங்க மீன் கண்காட்சி ஆகியவற்றிலும் கூட்டம் அதிகமாக இருந்ததை காண முடிந்தது.

Next Story