நெடுஞ்சாலைத்துறை அனைத்து ஓட்டுனர்கள் தலைமை சங்க மாநில செயற்குழு கூட்டம்


நெடுஞ்சாலைத்துறை அனைத்து ஓட்டுனர்கள் தலைமை சங்க மாநில செயற்குழு கூட்டம்
x
தினத்தந்தி 2 April 2022 9:33 PM IST (Updated: 2 April 2022 9:33 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அனைத்து ஓட்டுனர்கள் தலைமை சங்க மாநில செயற்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அனைத்து ஓட்டுனர்கள் தலைமை சங்க மாநில செயற்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடந்தது. கூட்டத்துக்கு திருவண்ணாமலை மண்டல தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் குமார் வரவேற்றார். 

சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் பொங்கியண்ணன், மாநில பொருளாளர் முருகேசன், அனைத்து அமைப்புசாரா தொ.மு.ச. மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் பேசினர். அரசு துறை ஊர்தி ஓட்டுனர் சங்க மாவட்ட செயலாளர் நியமத்துல்லா வாழ்த்தி பேசினார். பொதுச் செயலாளர் குமார் கோரிக்கையை விளக்கி பேசினார். 

கூட்டத்தில் காலியாக உள்ள தரக்கட்டுப்பாடு வாகனங்களுக்கும், மற்ற காலியாக உள்ள வாகனங்களுக்கும் ஓட்டுனர்கள் பணியிட மாறுதல் கேட்கும் பட்சத்தில் மாறுதலில் பணியிடம் வழங்க ஆவண செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆய்வக வேன்களுக்கும், தற்போது கொள்முதல் செய்யப்பட்டுள்ள சாலையில் ஏற்படும் மாசுவை சுத்தம் செய்யும் வாகனத்துக்கும் நிரந்தரப்படுத்த ஓட்டுனர்களை நியமித்து இயக்க ஆவண செய்ய வேண்டும்.

வாகனங்களை தொய்வின்றி பராமரிக்க ஏதுவாக ஆண்டுதோறும் வாகனங்களுக்கு கூடுதல் நிதி வழங்கி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கழிவு நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களின் ஓட்டுனர்களுக்கு காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கி பணியமர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதில் நெடுஞ்சாலைத்துறை அனைத்து ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் செய்யாறு கோட்ட தலைவர் பரசுராமன் நன்றி கூறினார்.

Next Story