விருத்தாசலத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
விருத்தாசலத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
விருத்தாசலம்
விருத்தாசலம் நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதை நகராட்சி தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணை தலைவர் ராணி தண்டபாணி முன்னிலை வகித்தார். ஆணையர் ஜெயபிரகாஷ் நாராயணன் வரவேற்றார். இதில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.
விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்ட இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பாலக்கரையில் முடிவடைந்தது.
தொடர்ந்து நகராட்சி தலைவர் தலைமையில், துணை தலைவர், கவுன்சிலர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விருத்தாசலம் செல்லியம்மன் கோவில் ஆற்றங்கரைப் பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தினர். இது குறித்து நகராட்சி தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் கூறும்போது ,இந்நிகழ்வு நகராட்சியின் ஒரு முன்னோட்டம் ஆகும். விரைவில் நகராட்சியில் கூடுமானவரை பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்தப்படும் என தெரிவித்தார்.
Related Tags :
Next Story