கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் நிவாரணம் பெற மனு அளிக்கலாம் கலெக்டர் தகவல்


கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் நிவாரணம் பெற மனு அளிக்கலாம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 2 April 2022 9:42 PM IST (Updated: 2 April 2022 9:42 PM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள் நிவாரணம் பெற மனு அளிக்கலாம் கலெக்டர் தகவல்


கடலூர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத்தொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு, மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள, இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மாநில அளவில் 74,097 மனுக்கள் பெறப்பட்டு, 55,390 மனுக்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 13,204 மனுக்கள் ‘இருமுறை பெறப்பட்ட மனு’ என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் 20-ந் தேதிக்கு முன்பு நிகழ்ந்த கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வருகிற 18.5.2022-க்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கடந்த 20-ந் தேதி முதல் ஏற்படும் கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள், இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள காலக்கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள், அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும். எனவே கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர், மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் மனு அளித்து நிவாரணம் பெற்று பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story