பெண், 2 குழந்தைகளுடன் மாயம்
தனியார் காப்பகத்தில் தங்கியிருந்த பெண், 2 குழந்தைகளுடன் மாயமானார்.
நாகூர்:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஹரிஹரன்கூடல் அய்யனார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவருடைய மனைவி சிவமணி (வயது31). இவர்களது மகள்கள் சுபஸ்ரீ(7), சாதனாஸ்ரீ(3). இவர்கள் 3 பேரும் குடும்ப தகராறு காரணமாக நாகை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பரிந்துரையின் படி நாகூர் அருகே சாமந்தான்பேட்டையில் உள்ள தனியார் காப்பகத்தில் கடந்த 19-ந் தேதி முதல் தங்கியிருந்தனர். இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி சிவமணி தனது குழந்தைகளை தெற்கு பால்பண்ணைச்சேரியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் விட்டு விட்டுவருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து விடுதிக் காப்பாளர் அமிர்தவள்ளி நாகூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து மாயமான பெண் மற்றும் அவரது குழந்தைகளை தேடி வருகின்றனர்.
---
Related Tags :
Next Story