அனுமதியின்றி மண் அள்ளிய பொக்லின் எந்திரம் பறிமுதல்


அனுமதியின்றி  மண் அள்ளிய பொக்லின் எந்திரம் பறிமுதல்
x
தினத்தந்தி 2 April 2022 9:54 PM IST (Updated: 2 April 2022 9:54 PM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே அனுமதியின்றி மண் அள்ளிய பொக்லின் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் ஏர்வாடி ஊராட்சி பரமநல்லூர் கிராமத்தில் அனுமதியின்றி மண்  அள்ளப்படுவதாக கனிம வளத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில்  கனிமவளத்துறை உதவி புவியாளர் சேகர் மற்றும் திருக்கண்ணப்புரம் போலீசார் பரமநல்லூரில் ஆய்வு  செய்தார். அப்போது ஒரு இடத்தில் ஒருவர் பொக்லின் எந்திரம் மூலம் அனுமதியின்றி மண் அள்ளி கொண்டிருந்தார்.  போலீசாரை பார்த்ததும் அவர் பொக்லின் எந்திரத்தை அங்கேயே விட்டு விட்ட தப்பி ஓடிவிட்டார். இதை தொடர்ந்து  பொக்லின் எந்திரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து திருக்கண்ணப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
---

Next Story