வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி நாகையில், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி நாகையில், வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப்-2 நேரடி நியமனஅலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, அகவிலைப்படி உயர்வு நிலுவை ஆகியவற்றை வழங்க வேண்டும். 2019-ம் ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் துணை தாசில்தார் தற்காலிக பதவி உயர்வு பட்டியலை வெளியிட்டு தகுதியானவர்களுக்கு துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
கண்காணிப்பாளர் பணியிடங்கள்
அனைத்து சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அலுவலகங்களிலும், துணை தாசில்தார் நிலையில் கண்காணிப்பாளர் பணியிடங்களும், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் துணை தாசில்தார் நிலையில் தலைமை உதவியாளர் பணியிடங்களும் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், மாவட்ட துணைத்தலைவர் சுதர்ஸன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story