19 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் கெட்டுபோனதாக புகார்: 10 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை


19 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் கெட்டுபோனதாக புகார்: 10 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை
x
தினத்தந்தி 2 April 2022 10:02 PM IST (Updated: 2 April 2022 10:02 PM IST)
t-max-icont-min-icon

19 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் கெட்டுபோனதாக புகார் எழுந்ததை தொடர்ந்து 10 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய பொது மேலாளர் கே.கே.வசந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் கடந்த மாதம் 27-ந் தேதி விற்பனைக்கு அனுப்பப்பட்ட நிலைப்படுத்தப்பட்ட 18 ஆயிரத்து 973 லிட்டர் ஆவின் பாக்கெட் பால் கெட்டு போனதாக புகார்கள் வந்தன. இதையடுத்து கெட்டு போன பாலுக்கு ஈடாக மாற்று பால் 29-ந் தேதி நுகர்வோருக்கு வழங்கப்பட்டது. இந்தநிலையில் ஒன்றிய விதிமுறைகளுக்கு உட்பட்டு சம்பந்தப்பட்ட 10 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story