தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை கூட்டம்
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
தர்மபுரி:
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமை தாங்கினார். கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் தேசிங்குராஜன் வரவேற்றார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் ரஜினி மாறன், செந்தாமரைக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருச்சியில் நடக்கும் மாநில கலை இலக்கிய பேரவை மாநில பொதுக்கூட்டத்தில் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து திரளாக கலந்து கொள்வது, தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் தங்கமணி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சென்னகிருஷ்ணன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் பொன்மகேஸ்வரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவி மற்றும் நிர்வாகிகள் குமரேசன், சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story