கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு
சீர்காழி அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீ குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீ்ர் வீணாகி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சீர்காழி;
சீர்காழி அருகே கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீ்ர் வீணாகி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குடிநீர் குழாயில் உடைப்பு
சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட கடற்கரை கிராமங்களான பூம்புகார், வானகிரி, தென்னாப்பட்டினம், பெருந்தோட்டம், கீழமூவர்க்கரை, திருமுல்லைவாசல், கூழையார், தொடுவாய், பழையார், புதுப்பட்டினம், தாண்டவன்குளம், மங்கைமடம், திருநகரி, நாங்கூர், கீழசட்டநாதபுரம், கடவாசல், எடமணல், வடகால், மகேந்திரப்பள்ளி, புளியந்துறை, காட்டூர் உள்ளிட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாயில் தேனூர் என்ற கிராமத்தில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் தினமும் காலை, மாலை நேரங்களில் குடிநீர் வீணாகி சாலையில் சென்று வயல்வெளியில் கலந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் சாலைகள் சேதமடைந்து வருகிறது.
நடவடிக்கை
இதேநிலை தொடர்ந்தால் கடற்கரை கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதில் சிரமம் ஏற்படும்.
ஆகவே, சம்பந்தப்பட்ட துறையினர் தேனூர் கிராமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர்குழாய் உடைப்பை சரி செய்யுமாறு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story