ஓசூரில் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரம் அபேஸ்-கர்நாடக வாலிபர் கைது


ஓசூரில் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரம் அபேஸ்-கர்நாடக வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 April 2022 10:15 PM IST (Updated: 2 April 2022 10:15 PM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரத்தை அபேஸ் செய்த கர்நாடக வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி:
எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் 
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தின்னூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 38). இவர் அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 21-ந் தேதி இவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.65 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் கடந்த 1-ந் தெதி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் தினேஷ்குமார் பயன்படுத்தி வரும் மெயிலை ஹேக் செய்து, அதிலிருந்து அவருடைய வங்கி கணக்கு எண்ணை கண்டுபிடித்து, வேறொரு நபரின் வங்கி கணக்குக்கு ரூ.65 ஆயிரம் மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது
இதையடுத்து மெயிலை ஹேக் செய்து வங்கி விவரங்கள், பணத்தை திருடியதாக கர்நாடக மாநிலம் ஆனேக்கல் தாலுகா அத்திப்பள்ளி அருகே உள்ள பல்லூர் பகுதியை சேர்ந்த பட்டதாரியான கந்தராஜ் (24) என்பவரை நேற்று முன்தினம் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story