பெண்ணாடம் அருகே காயம் அடைந்து உயிருக்கு போராடிய மயில்கள் வனத்துறையினர் மீட்பு
பெண்ணாடம் அருகே காயம் அடைந்து உயிருக்கு போராடிய மயில்கள் வனத்துறையினர் மீட்பு
பெண்ணாடம்
பெண்ணாடம் அடுத்த செம்பேரி வெள்ளாற்று பகுதியில் மயில்கள் அதிகம் காணப்படுகின்றன. நேற்று காலை செம்பேரி கிராமத்தில் டேவிட் என்பவரது வயலின் அருகே காலில் படுகாயங்களுடன் 1½ வயதுடையை 2 மயில்கள் பறக்க முடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தன.
அப்போது அங்கு வந்த வயலின் உரிமையாளர் டேவிட் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 மயில்களையும் வீட்டிற்கு கொண்டு வந்தார். பின்னர் இது குறித்து அவர் விருத்தாசலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வன காப்பாளர் சங்கர், காவலர் ஆறுமுகம் ஆகியோர் விரைந்து வந்து காயமடைந்த 2 மயில்களையும் மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். காயம் குணம் அடைந்ததும் 2 மயில்களையும் காட்டுமயிலூர் காப்புக் காட்டில் விட்டுவிடுவதாக வன காப்பாளர் சங்கர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story