ஸ்ரீவைகுண்டம் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது
உகாதி பண்டிகையையொட்டி ஸ்ரீவைகுண்டம் கோவிலில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் உகாதி பண்டிகையை முன்னிட்டு ‘சுபகிருது வருஷ பஞ்சாங்கம்' வாசித்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாலையில் வைகுண்டநாயகி, சோரநாதநாயகி, ஸ்ரீதேவி, பூதேவியர்களுடன் உற்சவர் கள்ளபிரான் சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த சயனக்குறட்டிற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவில் திருவாராதனம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி ‘சுபகிருது வருஷ பஞ்சாங்கம்' வாசித்தார். அதில் அவர், இந்த வருடம் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும். கோவில் கொடை விழாக்கள் அதிகளவில் நடைபெறும் என்றார். கோவில் தக்கார் (பொறுப்பு) ராமசுப்பிரமணியன், நிர்வாக அதிகாரி கோவலமணிகண்டன், ஆய்வாளர் நம்பி மற்றும் கோவில் ஸ்தலத்தார்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story