காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் ஐ.என்.டி.யூ.சி. மாநில அமைப்பு செயலாளர் பெருமாள்சாமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. டேனியல் ராஜ் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி, வர்த்தக பிரிவு டேவிட் பிரபாகரன், அமைப்புசாரா தொழிலாளர் சங்கம் ஜெயக்கொடி, மண்டல தலைவர் தங்கராஜ், வர்த்தகப்பிரிவு ராஜபாண்டி, வர்த்தக காங்கிரஸ் அருள்வளன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா, கீழ அரசரடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜேசுதாசன், வடக்கு மாவட்ட செயலாளர் செந்தூர்பாண்டி, மாவட்ட துணை செயல் தலைவர் கந்தசாமி பாண்டியன், மகளிர் காங்கிரஸ் தெய்வகனி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் நம்பி சங்கர், வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் பெத்துராஜ், ஐ.என்.டி.யூ.சி. வீரன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநில துணைத்தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம் கண்டன உரையாற்றினார். இதில் மகிளா காங்கிரஸ் தலைவர் தனலட்சுமி, இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் நடேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story