245 பேருக்கு நகை கடன் தள்ளுபடி சான்றிதழ்


245 பேருக்கு நகை கடன் தள்ளுபடி சான்றிதழ்
x
தினத்தந்தி 2 April 2022 10:42 PM IST (Updated: 2 April 2022 10:42 PM IST)
t-max-icont-min-icon

கல்வராயன்மலையில் 245 பேருக்கு நகை கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

கச்சிராயப்பாளையம், 

கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 பவுன் நகைகளுக்கு உட்பட்டு கடன் பெற்றுள்ள பயனாளிகளுக்கு கடனை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலை கூட்டுறவு சங்கம் சார்பில் நகை கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகள் திருப்பி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு சங்க செயலாளர் குப்புசாமி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் சந்திரன், துணைத்தலைவர் பாஷாபி ஜாகிர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக உதயசூரியன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 120 பேருக்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான நகை கடன்களை தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ் மற்றும் நகைகளை வழங்கினார். தொடர்ந்து கிளாக்காட்டில் நடந்த நிகழ்ச்சியில் 125 பேருக்கு நகை கடன்களை தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ் மற்றும் நகைகளை திருப்பி  வழங்கி பேசினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம், குப்புசாமி, கல்யாணி கிருஷ்ணன், சீனிவாசன், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story