கும்பகோணம் ராமசாமி கோவிலில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
கும்பகோணம் ராமசாமி கோவிலில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கும்பகோணம்:-
கும்பகோணம் ராமசாமி கோவிலில் ராமநவமி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராமசாமி கோவில்
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ராமநவமி விழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் ராமர், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமன் உள்ளிட்ட சாமிகள் நேற்று காலை கோவிலில் உள்ள தங்க கொடிமரம் அருகே எழுந்தருளினர்.
தொடர்ந்து பட்டாச்சாரியார்கள் வேத பாராயணம் செய்ய, , கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட கொடி தங்க கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டம்
விழா நாட்களில் அனுமந்த வாகனம், இந்திர விமானம், சூரியபிரபை, சேஷ வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் மற்றும் தாயார் வீதிஉலா நடக்கிறது. வருகிற 5-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) தங்க கருடசேவையும், 10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ராமநவமியை முன்னிட்டு ராமபிரான், சீதாதேவி, லட்சுமணர் மற்றும் அனுமன் ஆகியோருடன் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் விழாக்குழுவினர் செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story