அன்னவாசல் அருகே சரக்கு ேவன் கவிழ்ந்து விபத்து காய்கறிகள் சாலையில் கொட்டின


அன்னவாசல் அருகே சரக்கு ேவன் கவிழ்ந்து விபத்து காய்கறிகள் சாலையில் கொட்டின
x
தினத்தந்தி 2 April 2022 11:07 PM IST (Updated: 2 April 2022 11:07 PM IST)
t-max-icont-min-icon

சரக்கு ேவன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அன்னவாசல்:
திருச்சியிலிருந்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை வழியாக அறந்தாங்கிக்கு சரக்கு வேன் ஒன்று அன்னவாசல் அருகே  திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் மேலூரில் சென்று கொண்டிருந்தது. அப்போது சரக்கு வேனின் பின் பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சரக்கு வேனில் இருந்த காய்கறிகள் அனைத்தும் சாலையில் கொட்டி வீணானது. இதனையடுத்து சாலையில் கொட்டியது போக எஞ்சிய காய்கறிகளை மாற்று வாகனத்தில் ஏற்றி எடுத்து சென்றனர். பின்னர் சாலையில் கவிழ்ந்து கிடந்த சரக்கு வேனை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர். இந்த விபத்தில் சரக்கு வேனை ஓட்டிவந்த அறந்தாங்கியை சேர்ந்த டிரைவர் சதாம்உசேன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story