வாய்க்காலில் தவறி விழுந்து 5 வயது சிறுமி பலி
உடுமலை அருகே வாய்க்காலில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போடிப்பட்டி
உடுமலை அருகே வாய்க்காலில் தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வட மாநில தொழிலாளி
அசாம் மாநிலம் பெத்தேலா பகுதியைச் சேர்ந்தவர் பெதாம் சக்கரவர்த்தி. இவர் உடுமலை அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் தனியார் கயிறு தொழிற்சாலையில் மனைவியுடன் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்.
இந்த தம்பதிக்கு பூஜா சக்கரவர்த்தி என்ற 5 வயது பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று குழந்தையை வீட்டில் விட்டு விட்டு கணவனும் மனைவியும் வேலைக்கு சென்று விட்டார்கள். வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது குழந்தையை வீட்டில் காணவில்லை. உடனடியாக பதறிய இருவரும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளைத் தேடினர்.
சிறுமி பலி
அப்போது அருகில் இருந்தவர்கள் குழந்தை பூஜா பி.ஏ.பி வாய்க்காலின் அருகில் விளையாடிக் கொண்டிருந்ததாகத் தெரிவித்தனர். இதனையடுத்து பதற்றம் அடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தினருடன் இணைந்து வாய்க்கால் பகுதியில் தேடினர். அப்போது சற்று தொலைவில் குழந்தை பூஜா வாய்க்கால் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே அவர்கள் சிறுமியை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை பூஜா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனால் பெற்றோர் கதறி அழுதனர். வாய்க்கால் கரையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக தவறி தண்ணீரில் விழுந்திருக்கக் கூடும் என்று தெரிகிறது.
இ்ந்த சம்பவம் குறித்து உடுமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வடமாநில தொழிலாளர்களின் 5 வயது குழந்தை வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story