ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு


ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 2 April 2022 11:15 PM IST (Updated: 2 April 2022 11:15 PM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச்சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே வெள்ளனூர் பகுதியை சேர்ந்தவர் கனகம்மாள் (வயது 70). இவர் நேற்று  வெள்ளனூரில் இருந்து புதுக்கோட்டைக்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார். பஸ் புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே வந்த போது கனகம்மாளின் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர். இது குறித்து டவுன் போலீஸ் நிலையத்தில் கனகம்மாள் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story