பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது
கொல்லங்கோடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொல்லங்கோடு,
கொல்லங்கோடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 பேர் கைது
கொல்லங்கோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகனய்யர் தலைமையிலான போலீசார் சூழால் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் 3 வாலிபர்கள் 2 மோட்டார் சைக்கிள்களுடன் நின்று கொண்டு பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்று கொண்டிருந்தனர்.
போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்திய போது அவர்கள் அடைக்காகுழி பகுதியை சேர்ந்த பால்ராஜ் மகன் ஜெரின் (வயது20), நெல்சன் மகன் அருண் சிங் (20), கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்த முகமது நவுபில் (23) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 3 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story