கால்நடை பல்நோக்கு மருத்துவமனை கட்ட பூமிபூஜை
திருப்பூரில் ரூ.2½ கோடியில் கால்நடை பல்நோக்கு மருத்துவமனை கட்ட பூமி பூஜை நடந்தது. இதில அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மேயர் தினேஷ்குமார் பங்கேற்றனர்.
திருப்பூர்
திருப்பூரில் ரூ.2½ கோடியில் கால்நடை பல்நோக்கு மருத்துவமனை கட்ட பூமி பூஜை நடந்தது. இதில அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மேயர் தினேஷ்குமார் பங்கேற்றனர்.
பூமி பூஜை
திருப்பூர் பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் ரூ.2 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிய கால்நடை பல்நோக்கு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டிடப்பணிக்கான பூமி பூஜை விழா நேற்று நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறும்போது, ‘தரைத்தளம், முதல்தளம் என 2 அடுக்குகளாக இந்த கட்டிடம் கட்டப்பட உள்ளன. தரை தளத்தில் கால்நடைகளுக்கான இரண்டு அறுவை அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. சிறிய மற்றும் பெரிய விலங்குகளுக்கு என்று தனித்தனியாக வெளி சிகிச்சை பிரிவு அமைக்கப்படுகிறது. தரைதளத்தில் கால்நடைகளுக்கான ஒரே கூடம், சிகிச்சை கூடம், மருந்துகள் பாதுகாப்பு அறை, தடுப்பூசி அறை, அவசர சிகிச்சை பிரிவு, மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண், பெண் தனித்தனியாக கழிப்பிட வசதி அமைகிறது.
14 மாதங்களில்
முதல்தளத்தில் முதன்மை மருத்துவர் அறை, அலுவலகம், பொருட்கள் பாதுகாப்பு அறை, ஆய்வகம், உணவு அறை, கூட்ட அரங்கம், மருத்துவ கருவி அறை அமைய உள்ளது. 14 மாதங்களில் இந்த கட்டிடம் கட்டப்படும்’ என்றார்.
விழாவில் கலெக்டர் வினீத், மேயர் தினேஷ்குமார், சுப்பராயன் எம்.பி., துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், உமாமகேஷ்வரி, கோவிந்தராஜ், கோவிந்தசாமி, கால்டை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பொன்பாரிவேந்தன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story