மார்த்தாண்டம் அருகே மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை
மார்த்தாண்டம் அருகே மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
மார்த்தாண்டம் அருகே உள்ள சாங்கை பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது62). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு ஒர்க் ஷாப்பில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். கடந்த சில காலமாக உடல் நலக்குறைவு காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
இதனால், வாழ்க்கையில் வெறுப்புற்ற அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பக்கத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
நேற்று காலையில் அவரது பிணம் மரத்தில் தூக்கில் தொங்குவதை கண்ட உறவினர்கள் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் விசாரணை நடத்தினார். இறந்த புஷ்பராஜுக்கு மனைவியும் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
Related Tags :
Next Story