கரூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.49-க்கு விற்பனை
கரூரில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.49-க்கு விற்பனையானது. டீசல் லிட்டர் ரூ.99-ஐ நெருங்கியது.
கரூர்,
பெட்ரோல்- டீசல் விலை உயர்வு
இந்தியாவில் கடந்த 4 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் ஒரே நிலையில் நீடித்தது. ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் காரணமாக கச்சா விலை உயர்ந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன.
இதனால் 137 நாட்களுக்கு பிறகு கடந்த 22-ந்தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டன. அதன்பிறகு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது.
கரூரில் கடந்த 22-ந்தேதி பெட்ரோல் 75 காசுகள் உயர்ந்து ரூ.102.44 காசுக்கு விற்பனையானது. அதன்பிறகு தொடர்ந்து விலை அதிகரித்து 23-ந்தேதி ரூ.103.20 காசுக்கும், 25-ந்தேதி 103.96 காசுக்கும், 26-ந்தேதி ரூ.104.73 காசுக்கும், 27-ந்தேதி ரூ.105.18 காசுக்கும், 28-ந்தேதி ரூ.105.47 காசுக்கும், 29-ந்தேதி ரூ.106.22 காசுக்கும், 30-ந்தேதி 106.98 காசுக்கும், 31-ந்தேதி ரூ.107.73 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றுமுன்தினம் (1-ந்தேதி) விலையில் மாற்றமில்லை. இந்தநிலையில் நேற்று மீண்டும் 76 காசுகள் உயர்ந்து ரூ.108.49 காசுக்கு பெட்ரோல் விற்பனை ஆனது.
டீசல் ரூ.99-ஐ நெருங்கியது
இதேபோல் டீசல் கடந்த 22-ந்தேதி 77 காசுகள் உயர்ந்து ரூ.92.51 காசுக்கு விற்பனையானது. 23-ந்தேதி ரூ.93.27 காசுக்கும், 25-ந்தேதி ரூ.94.03 காசுக்கும், 26-ந்தேதி ரூ.94.79 காசுக்கும், 27-ந்தேதி ரூ.95.31 காசுக்கும், 28-ந்தேதி ரூ.95.64 காசுக்கும், 29-ந்தேதி ரூ.96.31 காசுக்கும், 30-ந்தேதி ரூ.97.07 காசுக்கும், 31-ந்தேதி ரூ.97.83 காசுக்கும் விற்பனை ஆனது. 1-ந்தேதி விலையில் மாற்றமில்லை.
இந்தநிலையில் நேற்று 76 காசுகள் உயர்ந்து ரூ.98.59 காசுக்கு டீசல் விற்பனை ஆனது. இதேநிலை நீடித்தால் விரைவில் பெட்ரோல் ரூ.110 ஆகவும், டீசல் விலை ரூ.100 ஆகவும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வால், கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி வரும் ஏழை, நடுத்தர பொதுமக்கள், தற்போது பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story