அ.தி.மு.க. பிரமுகர் காரை எரித்த வழக்கில் ஒருவர் கைது
அ.தி.மு.க. பிரமுகர் காரை எரித்த வழக்கில் ஒருவர் கைது
பரமக்குடி, ஏப்.3-
பரமக்குடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் வின்சென்ட் ராஜா. இவர் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக இருந்தார். இந்நிலையில் சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியதன் காரணமாக அவர் அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஜூன் 21-ம் தேதி இரவு வின்சென்ட் ராஜாவின் காரை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் பரமக்குடியை சேர்ந்த சகாயம் என்பவரின் தூண்டுதலின் பேரில் பரமக்குடியை சேர்ந்த மணிகண்டன்(வயது40), மேலத்தூவல் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த், காளீஸ்வரன் ஆகியோர் காரை எரித்தது தெரியவந்தது. உடனே போலீசார் மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள ஆனந்த், காளீஸ்வரன், சகாயம் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story