வறட்சியை தாங்கி வளரும் பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி


வறட்சியை தாங்கி வளரும் பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி
x
தினத்தந்தி 3 April 2022 12:24 AM IST (Updated: 3 April 2022 12:24 AM IST)
t-max-icont-min-icon

வறட்சியை தாங்கி வளரும் பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம்
வறட்சியை தாங்கி வளரும் பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
வறட்சியை தாங்கும் ரகங்கள் 
ராமநாதபுரம் அருகே குயவன்குடி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குனர் டாம்சைலஸ் தலைமை தாங்கி நுண்ணீர் பாசனத்தின் நன்மைகள் மற்றும் தென்னையை பாதிக்கும் வெள்ளை சுருள் பூச்சியின் தாக்குதல் அறிகுறிகள் மற்றும் கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விளக்கி கூறினார். துணை இயக்குனர் கண்ணையா முன்னிலை வகித்து 2-ம் போக பயிர் சாகுபடியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார். 
வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். துணை இயக்குனர் சேக் அப்துல்லா, வேளாண் அறிவியல் நிலைய தலைவர் ராகவன், உதவி பேராசிரியர்கள் பாலாஜி, இளஞ்செழியன், பாலசுப்பிரமணியன், சுந்தர் சிவக்குமார் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழு மண்வள அமைப்பு, வறட்சியினை தாங்கி வளரும் ரகங்கள், பயிர் சாகுபடி, உயிர் உர விதை நேர்த்தி, பூஞ்சான விதை நேர்த்தி, ஒருங்கிணைந்த நீர், உரம், பூச்சி, நோய் மேலாண்மை மற்றும் பண்ணை எந்திரங்களின் பயன்பாடு, காய்கறிகள் சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் அறுவடைக்குப் பின் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி தரமான பொருளாக விற்பனை செய்தல் ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது. 
விவசாயிகள்
ராமநாதபுரம், உச்சிப்புளி, திருப்புல்லாணி, போகலூர், ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்த 50 விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜேஷ்குமார் செய்திருந்தார். ராமநாதபுரம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சூர்யா நன்றி கூறினார்.

Next Story