ராமேசுவரத்தில் பக்தரிடம் திருட்டு
ராமேசுவரத்தில் பக்தரிடம் திருட்டு
ராமேசுவரம்
திருவள்ளூர் மாவட்ட பகுதியில் இருந்து வெங்கடேஷ் என்பவர் குடும்பத்தினருடன் நேற்று ராமேசுவரம் வந்துள்ளார். ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தனது குடும்பத்தினரின் உடைமைகளுடன் கூடிய பேக்குகளை கடற்கரைப்பகுதியில் வைத்துவிட்டு அருகிலேயே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் உங்கள் பணம் கீழே விழுந்து கிடப்பதாக கூறவும், அவர் தன் அருகில் வைத்திருந்த பேக் மற்றும் பைகளில் இருந்து சிறிது தூரம் தள்ளி அந்த பணத்தை எடுக்க சென்றார். அப்போது அந்த இளைஞர் வேகமாக வெங்கடேஷின் பேக் ஒன்றை எடுத்து கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். அந்த பேக்கில் ரூ.20 ஆயிரம், ஆதார் அட்டை, ஏ.டி.எம். கார்டுகள் உள்ளிட்டவைகளும் இருந்துள்ளன. இதுகுறித்து அவர் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
Related Tags :
Next Story