சாலைப்பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம்
நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கரூர்,
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட மாநாடு கரூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் சண்முகராஜா தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர்கள் பெருமாள், ராஜாசிதம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். இறந்த சாலைப்பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு கருணை அடிப்படையிலான வாரிசு வேலை வழங்கிட வேண்டும். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலைப்பணியாளர் காலியிடங்களை நிரப்பிட வேண்டும். தரஊதியம் ரூ.1,900-ஆக உயர்த்தி அன்ஸ்கில்டு ஊழியர்களாக அறிவித்திட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் ராஜலிங்கம், தலைவர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story