காரைக்குடி பகுதியில் கடும் வெயிலை குளிர வைத்த கோடை மழை


காரைக்குடி பகுதியில் கடும் வெயிலை குளிர வைத்த கோடை மழை
x
தினத்தந்தி 3 April 2022 12:27 AM IST (Updated: 3 April 2022 12:27 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி பகுதியில் கடும் வெயிலை குளிர வைத்த கோடை மழை பெய்தது

காரைக்குடி,
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பகல் முழுவதும் பலத்த வெயில் வாட்டி வதைக்க தொடங்கியதால் பல்வேறு தரப்பு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். பொதுவாக ஆண்டுதோறும் அக்னி நட்சத்திரம் தொடங்கும் போது கடுமையான வெயில் வாட்டி வதைக்கும். ஆனால் இந்தாண்டு வரும் மே மாதம் 4-ந்தேதி தொடங்கும் அக்னி நட்சத்திர வெயில் 24 நாட்கள் வரை நீடிக்கிறது. இந்நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் 100 டிகிரி வரை மதியம் வேளையில் வெயில் வாட்டி வதைக்க தொடங்கியது. இந்நிலையில் நேற்றும் காரைக்குடி பகுதியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வழக்கம் போல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன் பின்னர் மதியம் 1.30 மணிக்கு திடீரென வானம் மேகமூட்டமாக காணப்பட்ட நிலையில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து அரை மணி நேரத்திற்கும் மேல் நீடித்ததால் நகரில் பல்வேறு இடங்களில் கோடை வெயில் தாக்கம் குறைந்து குளிர்ச்சியாக காணப்பட்டது. மாலை 4 மணிக்கும் மேல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டதால் இரவு குளிர்ச்சியான நிலை நீடித்ததால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Tags :
Next Story