கஞ்சா விற்ற வாலிபர் கைது


கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 April 2022 12:58 AM IST (Updated: 3 April 2022 12:58 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் சிவகிருஷ்ணன்(வயது 23). இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பதாக தளவாய் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார், சிவகிருஷ்ணனை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 30 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். அப்போது அங்கு வந்த அவரது உறவினர்கள், சிவகிருஷ்ணனனை விடுவிக்க வேண்டும் என்று கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து போலீசார் பாதுகாப்புடன் சிவகிருஷ்ணனை அழைத்துச்சென்று, செந்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story