பெண்ணிடம் நகை பறிப்பு


பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 3 April 2022 1:07 AM IST (Updated: 3 April 2022 1:07 AM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் அருகே பெண்ணிடம் நகையை பறித்து சென்றனர்.

ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள துரைசாமிபுரத்தை சேர்ந்தவர் அய்யர். இவருடைய மனைவி குருவம்மாள் (வயது 50). இவர் லட்சுமியாபுரம் தெருவில் வசிக்கும் தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இவர் தெருவில் நடந்து வந்து கொண்டிருந்த போது, எதிரே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் குருவம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் நகையை பறித்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். அப்போது நிலை தடுமாறி விழுந்ததில் குருவம்மாளுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த  துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story