டியூசனுக்கு வந்த மாணவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து ரசித்த அரசு பள்ளி ஆசிரியை
மதுரையில் டியூசன் படிக்க வந்த மாணவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து ரசித்த அரசுப்பள்ளி ஆசிரியை போலீசாரிடம் சி்க்கினார். மேலும், அந்த வீடியோவை பரப்பிய அவருடைய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரையில் டியூசன் படிக்க வந்த மாணவர்களுடன் உல்லாசமாக இருந்து வீடியோ எடுத்து ரசித்த அரசுப்பள்ளி ஆசிரியை போலீசாரிடம் சி்க்கினார். மேலும், அந்த வீடியோவை பரப்பிய அவருடைய கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார்.
அரசு பள்ளி ஆசிரியை
மதுரை பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த 45 வயது பெண், மதுரை-சிவகங்கை மாவட்ட எல்லை பகுதியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். கணவரை பிரிந்த இவர், டியூசனும் எடுத்து வந்தார். கல்லூரியில் படிக்கும் தனது மகனுடன் வசித்து வந்தார்.
பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் அவரிடம் டியூசன் படித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில் 16, 18 வயதுடைய 2 மாணவர்களுடன் அந்த ஆசிரிைய உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி, தற்போது அந்த ஆசிரியை போலீசிடம் சிக்கி இருக்கிறார். இந்த வீடியோவை வெளியிட்டது, அந்த ஆசிரியையின் கள்ளக்காதலன் வீரமணி (வயது 39) என்பது தெரியவந்து, அவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
ஆசிரியையின் வலையில் டியூசனுக்கு சென்ற மாணவர்கள் சிக்கியது எப்படி? என்பது பற்றி நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-
மாணவர்களுடன் உல்லாசம்
அந்த ஆசிரியையின் கள்ளக்காதலன் வீரமணிக்கு மதுரை தனக்கன்குளம் சொந்த ஊர் ஆகும். இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரெயிலில் செல்லும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகமாகி கள்ளத்தொடர்பாகியது.
அடிக்கடி ஆசிரியையின் வீட்டிற்கு வீரமணி சென்றுள்ளார். இவர்களது கள்ளத்தொடர்பு விவகாரம் ஆசிரியையின் கணவருக்கு தெரியவந்ததால் ஏற்பட்ட தகராறில் அவருடைய கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.
அதன்பின் வீரமணியுடனான நெருக்கத்தை ஆசிரியை அதிகரித்துள்ளார். ஆசிரியைக்கு ஆபாச படம் பார்ப்பதில் விருப்பம் இருந்துள்ளது. அதற்கு கள்ளக்காதலனும் உதவி இருக்கிறார்.
மேலும், ஆபாச படத்தில் வரும் காட்சியைப்ேபால் இருக்க விரும்பிய அந்த ஆசிரியை, தனது வீட்டிற்கு டியூசன் படிக்க வரும் 2 மாணவர்களை பயன்படுத்த திட்டமிட்டார். அதன்படி, அந்த மாணவர்களுக்கு ஆபாச படங்களை அனுப்பி தனது வலையில் வீழ்த்தி இருக்கிறார்.
அந்த மாணவர்களை தனியாக வரவழைத்து உல்லாசம் அனுபவித்துள்ளார். மாணவர்களுடன் உல்லாசமாக இருந்ததை, தனது கள்ளக்காதலன் வீரமணி மூலமாக வீடியோ எடுத்துள்ளார்.. பின்னர், அந்த ஆபாச வீடியோவை ஆசிரியை பார்த்து ரசித்துள்ளார்.
சமூக வலைத்தளங்கள்
இந்த நிலையில், மாணவர்களுடன் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வீரமணி தனது உறவினர் உள்பட சிலருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் ஒருவர், அந்த வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் கேட்டுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர்கள், இதுகுறித்து கரிமேடு போலீசில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், அந்த வீடியோ குறித்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே சமூக வலைதளங்களிலும் பரவிய அந்த வீடியோவை, அவற்றில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆசிரியையிடம், மதுரை நகர் அனைத்து மகளிர் போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அதன்பி்ன்னரே அவர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செல்போன்கள் பறிமுதல்
மேலும் ஆசிரியை பயன்படுத்திய செல்போன்கள் மற்றும் லேப்டாப், கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தன. ஆசிரியையிடம் டியூசன் படித்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் வேறு யாரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா? என்பது குறித்த விசாரணையும் மும்முரமாக நடக்கிறது.
ஆசிரியையும் கைது
பள்ளி மாணவர்களுடன் நெருக்கமாக இருந்த ஆசிரியையிடம் போலீசார் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த விவகாரம் மதுரையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story