பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு


பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு
x
தினத்தந்தி 3 April 2022 1:12 AM IST (Updated: 3 April 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரித்துள்ளது.

திருச்சி, ஏப்.3-
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.  அந்த வகையில் 137 நாட்களாக ஒரே விலையில் நீடித்து வந்த பெட்ரோல், டீசல் விலை கடந்த 22-ந் தேதியில் இருந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், திருச்சியில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.90-க்கும், டீசல் ரூ.98-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில் நேற்று காலை பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி திருச்சியில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.108.65-க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.98.76-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.

Related Tags :
Next Story