மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம ஆசாமி
மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம ஆசாமி தப்பி ஓடினார்.
நொய்யல்,
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை சாவியுடன் நிறுத்திவிட்டு பணம் எடுக்க சென்றார். இதை பார்த்துக்கொண்டிருந்த மர்ம ஆசாமி மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஈரோடு-கரூர் நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். இதனைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மோட்டார் சைக்கிள் உரிமையாளரிடம் தகவல் தெரிவித்துவிட்டு அந்த ஆசாமியை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்றனர். மேலும் இதுகுறித்து கொடுமுடி போலீசார் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் மர்ம ஆசாமி புன்னம்சத்திரம் அருகே உள்ள பழைய ஒயின்ஷாப் அருகே சென்று கொண்டிருந்த போது போலீசார் வருவதை கண்டு பீதியடைந்து மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story