கல்லூரி என்.சி.சி. மாணவர்களுக்கு`சி' சான்றிதழ் தேர்வு


கல்லூரி என்.சி.சி. மாணவர்களுக்கு`சி சான்றிதழ் தேர்வு
x
தினத்தந்தி 3 April 2022 1:19 AM IST (Updated: 3 April 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி என்.சி.சி. மாணவர்களுக்கு`சி' சான்றிதழ் தேர்வு

திருச்சி, ஏப்.3-
திருச்சி தேசிய மாணவர் படைகுரூப்ஹெட்குவார்டர்ஸ் சார்பாக அனைத்து பட்டாலியன்களில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கான `சி'  சான்றிதழ் தேர்வு புனித வளனார் கல்லூரியில் 2 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று செய்முறை தேர்வு நடைபெற்றது. இதில் டிரில் எனப்படும் கவாத்து பயிற்சி, ஐ.என்.எஸ்.ஏ.எஸ்., எஸ்.எல்.ஆர்., .22 ரைபிள் என பல்வேறு துப்பாக்கி வகைகளை எப்படி கையாள்வது, துப்பாக்கி சுடும் முறைகள், அதன் பாகங்களைப் பிரித்தல் மற்றும் இணைத்தல், மேப் ரீடிங், திசையறிதல் போன்ற செய்முறை தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை திருச்சி சரக தேசிய மாணவர் படை தலைவர், குரூப் கமாண்டர் கர்னல் இளவரசன் தலைமையில் என்.சி.சி. குரூப் லெப்டினன்ட் காளியப்பன் உள்ளிட்ட பல்வேறு ராணுவ அதிகாரிகள், விமானப்படை அதிகாரிகள், கல்லூரி என்.சி.சி. அலுவலர்கள் நடத்தி வருகின்றனர். இந்த தேர்வில் திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படையைசேர்ந்தமாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஹெல்த் அண்ட் ஹைஜின், பொது ராணுவ அறிவு, அவற்றின் பயன்பாடுகள், இந்தியா கலந்து கொண்டிருந்த போர்கள், உலகப் போர்கள் போன்ற தலைப்புகளில் எழுத்து தேர்வு நடைபெறுகிறது.

Next Story