தாமிரபரணி ஆற்றில் மூழ்கி ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி


தாமிரபரணி ஆற்றில் மூழ்கி ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி
x
தினத்தந்தி 3 April 2022 1:27 AM IST (Updated: 3 April 2022 1:27 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.

நெல்லை:
நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலியானார்.

ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்

பாளையங்கோட்டை மாருதி நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது 62). ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். மகள், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று காலையில் முருகன் நெல்லை வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் அருகில் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

ஆற்றில் மூழ்கி...

எனவே முருகனைத் தேடி அவருடைய மகன் செல்வசுந்தர், ஆற்றங்கரையில் சென்று பார்த்தார். அங்கு முருகனின் மோட்டார் சைக்கிள் மற்றும் உடைமைகள் கிடந்தது. இதனால் தந்தை ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற அச்சத்தில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

உடனே தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ், ஏட்டு செல்வம் உள்ளிட்ட மீட்பு குழுவினர் விரைந்து வந்து ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆற்றில் மூழ்கி இறந்த முருகனின் உடலை மீட்டனர். அவரது உடலை பாளையங்கோட்டை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story