அரசு பஸ் மோதி 2 பேர் பலி
சிவகாசி அருகே அரசு பஸ் மோதி 2 பேர் பலியாகினர்.
தாயில்பட்டி,
சிவகாசி அருகே அரசு பஸ் மோதி 2 பேர் பலியாகினர்.
2 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து வெம்பக்கோட்டை வழியாக சங்கரன்கோவிலுக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ் வெம்பக்கோட்டை ஆற்றுப்பாலம் வளைவில் சென்ற போது, அந்த வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். திடீரென அந்த பஸ்சும், மோட்டார் சைக்கிளும் ேமாதிக்கொண்டன.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே வீரன் (வயது 55) என்பவர் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய தர்மனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவகாசிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்தார்.
டிரைவர்-கண்டக்டர் மீது வழக்கு
இந்த சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, பலியான 2 பேரில் வீரன் நாமக்கல் மாவட்டம் கண்டிபாளையத்தைச் சேர்ந்தவர், அதே பகுதி பாரதி நகர் சிறு மவுகி கிராமத்தைச் சேர்ந்த தர்மன் (45) என்பதும் தெரியவந்தது. வீரன், தர்மன் உள்பட மேலும் சிலர் கிணறு தோண்டும் பணிக்காக வெம்பக்கோட்டை பகுதிக்கு வந்தனர். இவர்கள் மற்ற தொழிலாளர்களுக்காக சாப்பாடு வாங்க சென்ற போது விபத்தில் சிக்கி பலியானது தெரியவந்தது.
மேலும் இதுதொடர்பாக அரசு பஸ் டிரைவரான ஆண்டிப்பட்டியை சேர்ந்த பெருமாள் (48), கண்டக்டரான மதுரை புதுதாமரைபட்டியை சேர்ந்த ராமமூர்த்தி (45) ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story