இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய போலீஸ்காரர்
விருதுநகரில் ஆயுதப்படை குடியிருப்புக்கு அழைத்துச்சென்று இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்,
விருதுநகரில் ஆயுதப்படை குடியிருப்புக்கு அழைத்துச்சென்று இளம்பெண்ணை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இளம்பெண்
விருதுநகரை சேர்ந்த 23 வயது இளம் பெண், பெற்றோர் இல்லாத நிலையில் தனது சகோதரியுடன் வசித்து வருகிறார். நர்சிங் படித்துள்ள இவருக்கு முகநூல் மூலம் விருதுநகரில் ஆயுதப்படை போலீஸ்காரராக உள்ள கண்ணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கண்ணன், அந்த இளம்பெண்ணை ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய போது கண்ணன் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கர்ப்பிணி
இதனைதொடர்ந்து அந்த பெண்ணை மிரட்டி மீண்டும் நெருக்கமாக இருந்துள்ளார். இந்நிலையில் இளம்பெண் 2 மாத கர்ப்பிணியானது அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம்பெண் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், ஆயுதப்படை போலீஸ்காரர் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே திருமணமானவர்
போலீஸ்காரர் கண்ணனின் சொந்த ஊர் வத்திராயிருப்பு. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 3 குழந்தைகளும் வத்திராயிருப்பில் உள்ளனர்.
இவர் மட்டும் தனியாக ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் இருந்து வருகிறார்.
விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து இளம்பெண்கள் பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு ஆட்படும் நிலையில் போலீஸ்காரர் ஒருவரே இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story